CRIWMP

Blog, News

மழை நீர் ஒரு மகத்தான குடிநீர்

வடக்கின் வாயிலாக விளங்கும் வவுனியா மாவட்டம் நான்கு பிரதேச செயளாளர் பிரிவுகளாக  பிரிக்கப்பட்டுள்ளது. அதில் செட்டிக்குளம் மற்றும் வவுனியா தெற்கு ஆகிய  இரண்டு பிரதேச செயலாளார். பிரிவுகளில் “காலநிலை மாற்றத்தினை தாக்குப்பிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவக் கருத்திட்டம்” எனும் திட்டம் நீர்ப்பாசன அமைச்சின் அனுசரனையூடனும்.பசுமை காலநிலை நிதியத்தின் நிதி உதவியூடனும்  UNDP அமைப்பின் தொழிநுட்ப ஆலோசனையூடனும் PALM  நிறுவனத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

செட்டிக்குளம் சார்ந்த பிரதேசம் அதிக வறுமைக்குட்பட்ட மக்களையூம் மேட்டு நிலப்பரப்பையும் கொண்ட ஒரு  உலர் வலய பிரதேசமாகும். கடந்த 25 வருடங்களாக இங்கு நீர்  வளம் படிப்படியாக குறைய தொடங்கியது. நீர்  சேமிப்பிற்காக எமது முன்னோர்களால் வெட்டப்பட்ட சிறு சிறு குளங்கள் காடுகளாகவும் மண்மேடுகளாகவும் மாறிப்போயின. அதிக கிணறுகள் பராறிப்பாரின்றி  தூர்ந்து போயுள்ளன. இங்கு வாழ்ந்த மக்கள் அயல் நாடுகளிலும் அயல் மாவட்டங்களிலும் நகர்ப்புரங்களிலும் குடியேறினார்கள். இவை எமது பிரதேசத்தில் யுத்தம் நடாத்திய கோர தாண்டவத்தின் விளைவுகள் இதனால் எமது மக்களிடம் பரிபோன சொத்துக்களில் நீர்  வளமும் ஒன்று.

மீண்டு வந்த மக்கள் வாழ்வாதரமாக விவசாயத்தை செய்ய தொடங்கினார்கள். விளைச்சலை அதிகம் பெறுவதற்காக இரசாயன உரங்களையும்.நஞ்சு மருந்துகளையும் அள்ளி வீசத் தொடங்கினார்கள் .இதன் விளைவு  வவுனியா மாவட்டத்தில் அதிக சிறுநீரக நோயாளர்கள் உருவாகினர், அதிலும் அதிக  சிறுநீரக நோயாளர்களை கொண்ட பிரதேசமாக செட்டிக்குளம் அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டது.. கடந்த வருடங்களில் நீர் ஒரு வியாபாரமானது ஆரம்ப காலங்களில் 5ரூபாவிற்க்கு விற்கப்பட்ட ஒரு லீற்றர் குடிநீர் காலப்போக்கில் 3ரூபா மற்றும் 2ரூபாவாக குறைவடைந்துள்ளது. காரணம் குடிநீர்  விற்பனையாளார்களின் அதிகரிப்பு ஆகும்.

திரு. அரிராமகுமார்  திருமணத்திற்க்கு பின்னரான (சுமார்  15 வருடங்களாக) காலப்பகுதியிலிருந்து  குருக்கள் புதுக்குளம்.எருக்கலம்கல் கிராமத்தில் வசித்து வருகிறார். கிராமத்தின் மொத்த குடும்பங்கள் 333 இதில் தெரிவு செய்யப்பட்ட திட்டப்பயனாளிகள் 114, அதில் ஆண்கள் 223.பெணகள் 239. சிறுநீரக நோயாளார்கள் 27. விசேடதேவைக்கு உட்பட்டோர் 26. பெண் தலைமைத்துவ குடும்பம் 21.

இவர் நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை என 5 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தலைவராவார்..

ஆரம்ப காலங்களில் வீட்டுக்கிணற்றிலிருந்தே குடி நீரை பெற்றுக்கொண்ட இவர் கடந்த 5 வருடங்களாக தனது வீட்டிலிருந்து 2 Km  ( சென்று வர 4 Km) தூரம்  சைக்கிளில்  சென்று குடிப்பதற்கான நீரை  பெற்று வந்துள்ளார்.இரண்டு நாளுக்கு ஒரு தடைவை இவ்வாறு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது

 

அவ்வாறான நிலையிலேயே தான் இவர் ஒரு சிறுநீரக நோயாளியெனவும் அடையாளங்காணப்பட்டார். அதனால் சுத்திகரிக்கப்பட்ட நீரையே குடிக்க வேண்டுமேன வைத்தியர்கள் கண்டிப்பாக கூறிவிட  அவர் தினமும் இரண்டு மணிநேரம் குடி நீருக்காக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் மாதமொன்றுக்கு 500 ரூபா வரை பணமும் செலவாகியமை குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு விவசாயி அத்தோடு கால்நடை வளர்பையும் மேற்கொண்டு வருகின்றார். இவற்றில் வரும் வருமானத்தில் மட்டுமே தனது குடும்ப செலவுகளை கொண்டு நடாத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இவ்வாறு நீருக்காக அலைவது கஷ்டமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் தான் இக் கிராமத்தில் குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி  திட்டமானது  PALM நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் சிறுநீரக நோயாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இவர் ஒரு சிறுநீரக நோயாளர் என்பதனால் இவருக்கும் மழை நீர்  சேகரிப்பு தாங்கித்தொகுதி ஒன்று வழங்கப்பட்டதுடன் அவற்றை பயன்படுத்தும் முறைகள் சுத்தமாக எவ்வாறு வைத்திருப்பது போன்றவை தொடர்பாகவும் அறிவூறுத்தப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அதனால் கடந்த ஆறு மாத காலமாக மழை நீரையே குடி நீராக பயன்படுத்தி வருவதாக இவர் குறிப்படுகின்றார். இதனால் தனக்கு நேரம் மற்றும் உடற்கஸ்டம் போன்றவையோடு முக்கியமாக பணமும் மீதமாகி இருக்கிது என்கின்றார்.

நீருக்காக மாதம் 500 x 6 மாதம் -3000 ரூபா மீதமாகியூள்ளது. மனதளவிலும் நிம்மதியாக இருப்பதோடு நீருக்காக செலவிட்ட பணத்தையூம் நேரத்தையூம் தன்னுடைய கால்நடைகளுக்காக செலவிடக் கூடியதாக உள்ளது என்கின்றார்.

இக் கிராமத்தில் அவரைப்போன்ற 31 நோயாளர்கள் காணப்படுகின்றனர் அவர்களும் மழை நீரை அருந்துவதால் மகிழ்ச்சியாகவூம் தமக்கான குடி  நீரை தாமே நேரடியாக பெற்றுக்கொள்வதால் நிம்மதியாகவூம் உள்ளர்.அத்தோடு மாறிவரும் காலநிலையின் காரணமாக நீர் வளத்தை நாம் இழந்து வருவதாகவும் அக்கால நிலைக்கு முகம் கொடுக்கும் வகையிலும் தமக்கு இத்திட்டம்  வரபிரசாதமாக அமைந்துள்ளதுதெனவும் கூறுகின்றார்.

 

ஏனைய குடி நீரை விட மழை நீரே குடிப்பதற்க்கு மிகவம் உகந்தது என்பதனை அறிந்துள்ளதோடு  திட்டதுடன் இணைந்ததின் ஊடாக ஏனைய அரச நிறுவனங்களிலுடான தொர்பும் இவருக்கு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக சமூக நீர் வழங்கல் சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் அதிகார சபை போன்றனவாகும். குடிநீர்  சார்ந்த விழிப்புர்வை பெற்று மாறிவரும் காலநிலையை ஏற்று அதற்க்கு ஈடுகொடுக்கும் வகையில் தம்மை மாற்றிக்கொண்டுள்ளார்கள்.

2025 ம் ஆண்டுகாலப்பகுதியில் எவ்வகையான சாதக நிலைப்பேற்றினை எதிர்ப்பார்கலாம்.

இவரது குடும்பத்தினா; அனைவரும் மழை நீரை குடி நீராக பாவிப்பதன் ஊடாக நீர் சார்ந்த நோய்களின்றி மகிழ்வாக வாழ்வதுடன் குடி நீருக்கான செலவு மீதப்படுத்தப்பட்டு அப்பணத்தினை வேறொரு தேவைக்காக பயன்படுத்துவார்கள். அத்தோடு மழைநீர் வீண்விரயமாவதும் கட்டுப்படுத்தப்படுகின்றது.

K. விஐயகுமாரி சமூக ஆர்வளர் CRIWMP                    PALM C.D.S.C.G.Ltd.